27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசின் அமைச்சரவை எடுத்த முடிவுக்கு மத்திய அரசு கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, குடியரசுத் தலைவர் மூலம் கோரிக்கையை நிராகரித்திருப்பது, மனிதநேயமற்ற முடிவு என்றும், உள்நோக்கம் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினையில், பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும் குழப்பம் ஏற்படுத்துவதிலும், மாநில அரசும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் தனது கருத்தை உடனடியாகத்  தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின், தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்