அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி
கர்நாடகாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஆண்டவன் அருளால் இந்த முறை தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் எழாது. நேற்று கர்நாடக நீர்ப்பாசன துறை அதிகாரிகளிடம் கபினியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டேன். எனது உத்தரவிற்கு பின்னர் நேற்றிரவு முதல் கபினியில் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்து எங்கள் அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இரு மாநில விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆண்டவன் அருளால் நல்ல மழை தொடரும் பட்சத்தில் எந்த பிரச்சினையும் வராது. இரு மாநிலங்களும் தண்ணீரை சரியாக பகிர்ந்து கொள்ளும். மழை தொடரும் பட்சத்தில் நடுவர் மன்றம் உத்தரவிட்டபடி மாதாந்திரம் திறக்க வேண்டிய தண்ணீரை திறப்பதில் பிரச்சினை இருக்காது.
Next Story