வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய பெண்களை ஏமாற்றுவது அதிகரிப்பு - சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு

வெளிநாட்டு வாழ் இந்திய கணவர்கள் இந்தியாவில் பெண்களை திருமணம் செய்து கைவிடுவது அதிகரிப்பதால் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய பெண்களை ஏமாற்றுவது அதிகரிப்பு - சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு
x
வெளிநாட்டு வாழ் இந்திய கணவர்கள் இந்தியாவில் பெண்களை திருமணம் செய்து கைவிடுவது அதிகரிப்பதால் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற வழக்குகள் நீதிமன்றத்துக்கு சென்று,நீதிமன்றங்கள் வெளிநாட்டு வாழ் இந்திய கணவர்களுக்கு சம்மன் அனுப்பினால்,அதை மதித்து அவர்கள் ஆஜராவதில்லை என்ற குற்றச்சாட்டும் அதிகரித்து வந்தது.இதே போல 48 வழக்குகள் மத்திய பெண்கள் நல்வாழ்வு துறை அமைச்சகத்திடம் கிடைத்துள்ளது.இந்த சம்பவங்களை பற்றி விசாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.அதில் வெளிநாட்டு வாழ் இந்திய ஆண்கள், இந்திய பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் திருமணத்தை 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்,திருமணத்திற்கு பிறகு கைவிடுவது,நீதிமன்ற சம்மணை மதிக்காமல் இருப்பது போன்ற குற்றங்களுக்கு அவர்களின் பாஸ்பேர்டை முடக்கவும்,சொத்துக்களை முடக்கவும் இந்த குழு பரிந்துரை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Next Story

மேலும் செய்திகள்