மக்களிடம் இருந்து குப்பைகளை பெற்றும் உரமாக்கும் மாநகராட்சி

குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி அதை மீண்டும் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கி வரும் நெல்லை மாநகராட்சியின் முயற்சி குறித்த ஒரு செய்தி தொகுப்பு
மக்களிடம் இருந்து குப்பைகளை பெற்றும் உரமாக்கும் மாநகராட்சி
x
நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் தினமும் சுமார் 130 டன் அளவிற்கு குப்பைகள் சேர்ந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இந்த குப்பைகளை எல்லாம் பயனுள்ள ஒன்றாக மாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் முடிவெடுத்தார்... 


இதையடுத்து நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுபோல் தரம் பிரித்து குப்பைகளை வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், அந்த தொகை குப்பைகளை பிரிக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் அதிரடியாக அறிவித்தார்... 

மாநகராட்சி ஆணையரின் இந்த உத்தரவு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் மக்கள் நாளடைவில் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் தான்  மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் முயற்சி கையில் எடுக்கப்பட்டது. நெல்லை ராமையன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளை வைத்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  

இதற்காக 20 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்கு உள்ள பகுதியில் இதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறுகிறார் இயற்கை உர தயாரிப்பு பிரிவு பொறுப்பாளர் முருகன்... 

இயற்கை உரம் தேவை என்றால் மாநகராட்சியை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உரிய வழிவகை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளும் பலன் பெறுவார்கள். வீணாக தூக்கி எறியும் குப்பையில் இருந்து மற்றவர்களுக்கு பயன் கிடைக்கும் வகையிலான இத்திட்டத்தை மேலும் விரிவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது... 


Next Story

மேலும் செய்திகள்