யாருக்கெல்லாம் புதிய வீடு வாங்க மானியம் கிடைக்கும்?
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வழங்கும் மானியத்தில் தற்போது சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் மானியம் கிடைக்குமா, மானியம் வாங்க தகுதிகள் என்ன?
பிரதான் மந்திர் ஆவாஸ் யோஜ்னா... இந்த திட்டத்தை பொறுத்த வரை அதிகபட்சமாக 2.67 லட்சம் ரூபாய் மானியம் பெறலாம்..
இதை மூன்று வகையாக பிரிக்கிறார்கள்.. ஒருவர் வாங்கும் ஆண்டு சம்பளத்தை வைத்து, குறைந்த வருமான பெறுபவர், நடுத்தர வருமானம் பெறுபவர் 1, நடுத்தர வருமானம் பெறுபவர் 2 என மூன்று வகையில் பிரிக்கப்படுகின்றனர்.
6 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்குபவர்களுக்கு, 645 சதுர அடியில் புதிய வீடு வாங்கும் போது, அதிகபட்சமாக 2.67 லட்சம் மானியம் கிடைக்கும். இந்த பிரிவினருக்கு மட்டும், இருக்கும் வீட்டை மாற்றியமைக்கவும் மானியம் உண்டு.
12 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்கள், 1, 722 சதுர அடி வீட்டுக்கு 2.35 லட்சம் வரை மானியம் பெற்று கொள்ளலாம். இது முன்னர் 1291 சதுர அடியாக இருந்து தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
18 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள், 2153 சதுர அடி வீட்டுக்கு, அதிகபட்சமாக 2.30 லட்சம் வரை மானியம் பெறலாம். இது முன்னதாக 1614 சதுர அடியாக இருந்து தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன்னர் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு, இந்த மானியம் கிடைக்காது... அதற்கு பின் கடன் வாங்கியவர்கள், தற்போது கூட விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரின் கண்காணிப்பில் உள்ள ஒரு 23 வயது இளைஞன், தனது ஊதியத்தில், புதிய வீடு வாங்கினால், அவருக்கும் மானியம் கிடைக்கும்.
கடன் வாங்கி புதிய வீடு வாங்க இருப்பவர்கள், வீடு கட்ட இருப்பவர்கள்... கடன் வாங்கும் வங்கியில் இந்த திட்டத்தில் மானியம் பெற தகுதி உள்ளவர்களா என்பதை கண்டிப்பாக கவனிக்கவும்...
Next Story