விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பார்த்தீனியம் செடிகள்

பார்த்தீனியம் செடிகளால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்... பார்த்தீனியம் செடிகளால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பார்த்தீனியம் செடிகள்
x
பார்த்தீனியம் செடிகள், இந்திய விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன.. 
நாடு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த களைச்செடியால் விவசாயிகள் சொல்லொனா துயருக்கு ஆளாகி வருகின்றனர். 

அமெரிக்க நாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்த போது, பார்த்தீனியம் விதைகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளன.  

எவ்வளவு வறட்சியையும் தாங்கிக்கொண்டு, அடர்த்தியாக வளரும் பார்த்தீனியம் செடிகள், விளை பயிர்களை வளரவிடாமல் தடுத்து, நாசமாக்கி விடுகின்றன.. இந்த பார்த்தீனியம் செடிகளால், விளைச்சல் கிட்டத்தட்ட 30 சதவிகிதமாக குறைந்துவிடுகிறது.

அதோடு இந்த செடிகள் மனிதர்களின் உடல்களிலோ விலங்குகளின் உடல்களிலோ பட்டால், தோல் வியாதிகளை ஏற்படுத்துகின்றன..
அந்த அளவுக்கு விஷச்செடிகளாக நிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றன..
  
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  அழித்துவரும் இந்த களைச்செடிகளை அழிக்க அரசும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் அவை போதுமானதாக இல்லை..     இச்செடிகளை எப்பாடுபட்டாவது ஒழித்துவிட மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.. 

Next Story

மேலும் செய்திகள்