தவறான தடுப்பூசி - ஒரே பகுதியில் இரு மாணவிகள் பாதிப்பு

மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே சிகிச்சை அளித்த அவலம் - தவறான சிகிச்சையால் மாணவிகளின் கல்வி பாதிப்பு
தவறான தடுப்பூசி - ஒரே பகுதியில் இரு மாணவிகள் பாதிப்பு
x
தவறான தடுப்பு ஊசியால், 2 மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நேர்ந்த கொடுமை என்ன...? 

சென்னை தண்டையார் பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி கவிதா, கடந்த மாதம் கண் அருகே ஏற்பட்ட காயத்திற்காக தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், ஊழியர்கள் அவருக்கு டிடி தடுப்பூசி போட்டுள்ளனர். 

அடுத்த நாளே ஊசி போட்ட இடத்தில் கட்டி உருவாக, தாங்க முடியாத வலியால் துடித்துள்ளார் கவிதா... கிளினிக்கில் கேட்டதற்கு, முறையான பதில் கிடைக்கவில்லை...

நாளுக்கு நாள் கட்டிகள் அதிகமாக, கூடவே வலியும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அருகில் வசிக்கும் திவ்யா என்ற பெண்ணும் இதே கிளினிக்கின் டிடி தடுப்பூசிக்கு இறையாகியுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மாணவியான திவ்யாவும், கையில் ஏற்பட்ட காயத்திற்காக அதே தனியார் கிளினிக்கை நாடியுள்ளார். அவருக்கும் அதே தடுப்பூசி, அதே பிரச்சினை... ஆனால் திவ்யாவிற்கு கட்டிகள் சற்று பெரிதாக மாற, அறுவை சிகிச்சை செய்வதாக கூறி கட்டிகளை சதையுடன் அகற்றியுள்ளனர். இந்த கொடூர செயலை திவ்யாவின் உறவினர்கள் கூறும் போது, மனதை பதைபதைக்க செய்கிறது. 

தவறான சிகிச்சை அளித்து மாணவிகளின் கல்வியை பாழாக்கிவிட்டதாக கண்ணீர் வடிக்கும் மாணவியின் உறவினர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நிலை, வேறெந்த குழந்தைக்கும் ஏற்பட கூடாது என கோரிக்கை விடுக்கின்றனர்.

காயத்தால் நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பெரும்பாலும், டிடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த டிடி தடுப்பூசிகளே புதிய நோய்க்கு வித்திட்டு, மாணவிகளின் கல்வியை பாழாக்கியுள்ளது, மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்