குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் குறித்த ஓர் செய்தி தொகுப்பு

ஜூன் 12 ஆம் தேதியான இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு..
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் குறித்த ஓர் செய்தி தொகுப்பு
x
வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட்டு வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் ஏராளம். இதேபோல் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வரும் சிறுவர்கள், நகரங்களில் உள்ள உணவகங்கள், கடைகள், வீடுகள் என வேலை பார்க்கும் நிலை உள்ளது. குறைந்த சம்பளத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வேலை பார்ப்பதையே நாம் குழந்தை தொழிலாளர் முறை என்கிறோம்... 

பள்ளிக்கு செல்லும் வயதிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருவதாக கூறுகிறார் தொழிலாளர் நலத்துறை அதிகாரி பாஸ்கரன்... 

தமிழகத்தை பொறுத்தவரை 98 சதவீதம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்,100 சதவீதம் என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிலாளர் நலத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டால் அவர்களுக்கு போதுமான கல்வியை வழங்க தன்னார்வலர்கள் இருப்பதாகவும், தன்னார்வ அமைப்புகள் மூலம் உரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறுகிறார் பாஸ்கரன்... 


குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு முயற்சி எடுத்து வந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க ஒவ்வொருவரும் கரம் கோர்க்க வேண்டிய தருணமும் இதுதான்... 

Next Story

மேலும் செய்திகள்