நான்கு சக்கர சுழலும் வாகனம் கல்லூரி மாணவரின் வடிவமைப்பு
கும்பகோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நான்கு சக்கர சுழலும் வாகனத்தை வடிவமைத்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள குருகூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன், தனியார் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.
பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் ஆர்வமுடைய இவர், தற்போது நான்கு சக்கர சுழலும் வாகனத்தை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது, வழக்கமான நான்கு சக்கர வாகனங்களைப் போலவே, இயக்க முடியும் அதே நேரம், இந்த வாகனம் ஒரு புள்ளியில் நின்று சுழலும். இருந்த இடத்தில் இருந்தவாறே நாலாபுறமும் சுழலும்.
கார் சக்கரங்கள், இருக்கை சீட், இரும்பு பைப் ஆகியவற்றைக் கொண்டு, சுமார் 40 ரூபாய் செலவில் 400 கிலோ எடையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராணுவ வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றில் இந்த வடிவமைப்பைப் புகுத்தலாம் என்று தெரிவிக்கிறார், மாணவர் சாமிநாதன்.
Next Story