கர்நாடக அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு : குமாரசாமிக்கு நிதி, துணை முதல்வருக்கு உள்துறை

கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
கர்நாடக அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு : குமாரசாமிக்கு நிதி, துணை முதல்வருக்கு உள்துறை
x
கர்நாடக அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி, முதல்வராகவும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் பதவியேற்ற நிலையில், காங்கிரஸ் சார்பாக 14 பேர் ம.ஜ.த. சார்பாக 9 பேர், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ என 25 பேர் கடந்த 6ம் தேதி அமைச்சர்களாக பதவியேற்றனர். 

இந்நிலையில், நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் குமாரசாமிக்கு நிதித் துறையும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுக்கு உள்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

குமாரசாமியின் மூத்த சகோதரர் ரேவண்ணாவுக்கு பொதுப்பணித் துறையும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி.தேவகவுடாவுக்கு உயர்கல்வித் துறையும் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு நீர்வளத் துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்