சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?

நேற்று உலக சுற்றுச் சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த தருணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?
x
ஜ.நா. சார்பாக கடந்த 1974ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 ந் தேதியை உலக சுற்றுச்சுழல் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான சுற்றுச் சூழல் தின வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  "பிளாஸ்டிக் மாசினை ஒழிப்போம்" என்ற கோஷத்துடன் இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. மனித இனத்தின் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கடல் வாழ் உயிரினங்களும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. உலகின் ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் வாக்கப்படுவதாக கூறுகிறது ஆய்வு. பிளாஸ்டிக்கை தவிர்க்க பலரும் தாமாகவே செயல்பட தொடங்கி உள்ளனர். கோவையில் ஒரு உணவகத்தில் துணிப் பை கொண்டு வந்தால் டீ அல்லது போண்டா இலவசம் என அறிவித்துள்ளனர். சென்னையில் ஆளுநர் மாளிகையில், கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர் வழங்கப்படுகிறது. 
ஜெர்மனியில் லீஃப் ரிபப்ளிக்  என்ற நிறுவனம்,  பிளாஸ்டிக் தட்டுகளுக்கு பதிலாக இலையில் தட்டுகளை தயாரித்து வருகிறது.பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், பொதுமக்களிடம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வில் தான் "பிளாஸ்டிக் ஒழிப்பின்" வெற்றி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்