நீட் தேர்வு பற்றிய புள்ளி விவரங்கள்...
நீட் தேர்வு பற்றிய புள்ளி விவரங்கள்...
அகில இந்திய அளவில், மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை, இந்த ஆண்டு 12.6 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இது கடந்த ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகம்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 859 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இந்த ஆண்டு 1 ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் எழுதினர். இதில் 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்ற ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 38.83 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு இது 39.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் 24 ஆயிரத்து 720 பேர் எழுதினர்.
உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில் இம்மாநிலங்கள் உள்ளன.
மூன்று மணி நேரம் நடந்த நீட் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம் பெற்றன. இவற்றில் உயிரியல் பாடத்தில் 90 கேள்விகளும், இயற்பியலில் 45 கேள்விகளும், வேதியலில் 45 கேள்விகளும் இருந்தன. சரியான விடைகளுக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைகளுக்கு மைனஸ் ஒன்று என்ற அளவில் மதிப்பெண்ணும் அளிக்கப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் இந்த ஆண்டு 119 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு 131 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தான் தேர்ச்சி என வரையறுக்கப்பட்டு இருந்தது.
நீட் தேர்வில் இந்த ஆண்டு பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றுள்ளர். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 12ம் இடத்தை பிடித்துள்ளார்.
Next Story