சுற்றுச்சூழல் தினம்-பிளாஸ்டிக் குப்பை அகற்றம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
ராமேஸ்வரம் அடுத்த குத்துக்கால் கடற்கரை பகுதியில் கிடந்த
பழைய வலைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்த இந்திய கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர காவல் குழும போலீசார் பாம்பன் ஊராட்சி அலுவலரிடம் ஒப்படைத்தனர். இந்த பணியில் அவர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். பேரணியின் இறுதியில் மாணவ, மாணவிகளுடன் அமைச்சரும் இணைந்து கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றினார்.
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை, எஸ்.பி. தேஷ்முக் சேகர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அகற்றினர். இதேபோன்று பல்வேறு அமைப்புகள் நாகை கடற்கரையை சுத்தம் செய்தனர்.
பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை பாலக்கரை பகுதியில் ஆட்சியர் சாந்தா தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை பேரணியில் பங்கேற்றவர்கள் வைத்திருந்தனர்.
Next Story