இன்று உலக சுற்றுச்சூழல் தினம், நீர்நிலைகளை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
திருச்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் உள்ள ஆறுகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் கழிவினால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, தூய்மையான நீரும் கழிவு நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயம் மற்றும் மக்களின் உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.
.
Next Story