நீட் தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா, பிளஸ் 2 வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதிலும், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story