2 வார்த்தையால் உயிரை மாய்த்த காதலி - சிக்கிய பகீர் கடிதம்

x

2 வார்த்தையால் உயிரை மாய்த்த காதலி - சிக்கிய பகீர் கடிதம்

புதுச்சேரியில் சாதி பெயரை கூறி காதலன் திட்டியதால், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியை சேர்ந்தவர் நந்திதா. 19 வயது இளம் பெண்ணான இவர், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில், விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். மாணவியை, புதுச்சேரி கரசூனூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்ற இளைஞர் காதலித்து வந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி இருவருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாணவியின் தாய் தந்தையை தரக்குறைவாக பேசிய இளைஞர், மாணவியை அவரது சாதி குறித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து போன மாணவி, மயக்க மருந்து மாத்திரைகளை அதிகளவில் உண்டு தற்கொலை செய்து கொண்டதும், தற்கொலைக்கு முன் தனது இறப்பிற்கு காரணம் ராஜேஷ்தான் எனக் கூறி கடிதம் எழுதி வைத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மாணவியின் காதலன் ராஜேஸை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்