இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-09-2023)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை
துவக்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்... காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில், பிரத்யேக ஏ.டி.எம். அட்டைகளையும் வழங்கினார்...+
"ஹவுஸ் ஒய்ஃப்" என்று குடும்பத் தலைவிகளை உதாசீனப்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை... தமது வாழ்வில், கருணை மிகு தாய், தூணாக மனைவி, தன்னம்பிக்கை கொண்ட மகள் என 3 சக்தி வாய்ந்த பெண்கள் கிடைத்துள்ளதாகவும் பெருமிதம்...
நாங்கள் முடித்த திட்டங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்... இந்த ஆட்சியை அகற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
'இந்தியா' கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்... தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
"50 ஆண்டுகளுக்கு முன்பாகவே சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது..."சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேரோடு அகற்ற வேண்டும் என்றும், மதிமுக முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ உறுதி...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்...நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்