சிம் கார்டு டீலர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

x

சிம் கார்டு டீலர்கள் இனி காவல்துறை சரி பார்ப்பை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சஞ்சார் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 52 லட்சம் போலி அலைபேசி இணைப்புகளை கண்டறிந்து அவற்றின் இணைப்பை துண்டித்து இருப்பதாக தெரிவித்தார். சைபர் குற்றங்கள் மற்றும் போலி அழைப்புகளை தடுக்க மொபைல் சிம் கார்டு டீலர்கள் இனி காவல்துறை சரி பார்ப்பையும் பயோமெட்ரிக் சரி பார்ப்பையும் (Police Verification) மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏமாற்று நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மொத்தமாக சிம் கார்டு (Bulk connections) இணைப்புகளை வழங்கும் நடைமுறையும் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விதிகளை மீறி செயல்படும் சிம் கார்டு டீலர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், நாட்டில் சுமார் 10 லட்சம் சிம்கார்டு டீலர்கள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் காவல்துறை சரி பார்ப்பை மேற்கொள்ள உரிய அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.சிம் கார்டு டீலர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்


Next Story

மேலும் செய்திகள்