அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை.. தென் கொரிய மாணவர் அதிர்ச்சி வாக்குமூலம்
அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை..
தென் கொரிய மாணவர் அதிர்ச்சி வாக்குமூலம்..
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் இண்டியானா போலிஸைச் சேர்ந்த வருண் மனிஷ் சேடா என்ற 20 வயது இளைஞர் கடந்த புதன்கிழமை, புகழ்பெற்ற பர்டூ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்...
இந்த விவகாரத்தில் மனிஷுடன் தங்கி இருந்த தென் கொரியாவைச் சேர்ந்த சக மாணவர் ஜி மின் ஜிம்மி ஷா கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, தான் கொலை செய்த மணிஷின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதுடன், தான் மிரட்டப்பட்டதால் தான் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்...
இருப்பினும் ஜி மின் எதற்காக மிரட்டப்பட்டார் உள்ளிட்ட கேள்விகளுக்கான விளக்கங்கள் தரப்படாத நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது...