யோகா செய்த பெண் இன்ஸ்டா பிரபலம் மீது பாய்ந்த வழக்கு.. பகிரங்க மன்னிப்பு

x

பஞ்சாப் பொற்கோவிலில் யோகா செய்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளூயன்சராக இருக்கும் அர்ச்சனா மக்வானா, பொற்கோவிலில் யோகா செய்தது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, குருத்வாராக்களை நிர்வகிக்கும் அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி , மக்வானாவின் செயல் சீக்கிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக பஞ்சாப் போலீசாரிடம் புகார் அளித்தது. இதனடிப்படையில், அர்ச்சனா மக்வானா மீது பஞ்சாப் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனிடையே தனது செயலுக்கு மக்வானா மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், தனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்