"திட்டமிட்டதை ஏன் செயல்படுத்த முடியல?" - அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரியும், கர்நாடக அரசை கண்டித்தும் தஞ்சையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டடம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், காவிரி பிரச்சனையில் திமுக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்றும், கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரை பெற்றுத்தரவில்லை என்றும் கூறினர். டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை பயிர்களில் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர் கருகியதாக குறிப்பிட்டனர்.
Next Story