முக்கியமான வழக்கில் பிரபல தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்...

x

பிசாசு 2 திரைப்பட தயாரிப்பாளர் முருகானந்தத்திற்கு, ஸ்ரீரங்கம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பிரபல திரைப்படம் தயாரிப்பாளரான முருகானந்தத்திற்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுந்தரம் என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, பிசாசு 2 படத் தயாரிப்பிற்காக முருகானந்தம் சுந்தரத்திடம், 26 லட்ச ரூபாயை கடனான பெற்றதாக கூறப்படுகிறது. 10 ஆண்டுகள் ஆகியும், முருகானந்தம் கடனை திருப்பி தரவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சுந்தரம் இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையொட்டி வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு, முருகானந்தத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு, ஸ்ரீரங்கம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்