ரூ.3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு

x

நடிகர் விமல் படத் தயாரிப்பிற்காக வாங்கிய கடனை,

வட்டியுடன் 3 கோடியே 6 லட்சம் ரூபாயை திருப்பித்தர, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் நடித்து, தயாரித்து வெளியான

"மன்னர் வகையறா" திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் 5 கோடி ரூபாய் கடனாக

கொடுத்திருக்கிறார்.

படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல், சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இது குறித்த புகாரைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில்,

ஒப்பந்தம் ஏற்பட்டது.

2021 ஆம் ஆண்டு 3

கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் ஒப்பந்தம்

செய்து கொடுத்துள்ளார்.

ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம், உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் 3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்