50வது படத்தில் மிரட்டிவிட்ட விஜய் சேதுபதி - வெறும் 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

x

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம், வசூல் சாதனை படைத்து வருகிறது. திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 81 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை எட்டியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில், அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நட்டி என்கிற நடராஜ், சிங்கம் புலி, முனிஷ்காந்த், மற்றும் நடிகைகள் மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்