ரிலீசாகும் வேட்டையன் - உற்சாக மிகுதியில் ரசிகர்கள் - வசூலில் வேட்டையாடுமா வேட்டையன் திரைப்படம் ?

x

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், அடுத்த ஹிட் படத்திற்கு ஆயத்தமானார் ரஜினிகாந்த்...

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்தின் இயக்குநரான, த.செ. ஞானவேலுடன் வேட்டையன் படத்தில் கமிட் ஆனார்..

படத்தின் தொடக்கம் முதலே அப்டேட்டுகளால் ரசிகர்களை குஷியாக்கி வந்தது படக்குழு.. அதேநேரம் படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது என்பதும் ப்ளஸ்..

மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசில், ராணா, ரக்‌ஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இது மட்டுமன்றி சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் என்பது தனி கவனம் பெறுகிறது...


1991ல் இந்தியில் ஒன்றிணைந்த இந்த கூட்டணி தற்போது மீண்டும் கைக்கோர்த்துள்ளது...

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அனிருத் இசையில் வெளியான பாடல்கள் படு ஹிட் என்றே சொல்லலாம்...

பாடல் மட்டுமா இசை வெளியீட்டு விழாவும் நட்சத்திர பட்டாளத்துடன் களை கட்டியது...

இப்படி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை படக்குழு அதிகரித்துக் கொண்டே வந்த சூழலில், டிரெய்லரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது..

இது மட்டுமன்றி கேரக்டர் இன்ட்ரோ என ஒவ்வொரு கதாபாத்திரங்கள் குறித்தும் அறிமுகம் செய்து அசத்தியது படக்குழு...

இச்சூழலில் படத்தின் முன்பதிவு தொடங்கி வசூலை குவிக்கத் தொடங்கியது.. இதுவரை சுமார் 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும் செயலிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன...

குறிப்பாக, இந்த ஆண்டு வெளியான ராயன், தி கோட், இந்தியன் 2 போன்ற பெரிய படங்களுடன் ஒப்பிடுகையில், அதிகளவிலான டிக்கெட் விற்பனை வேட்டையன் திரைப்படத்திற்கு தான் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கான பிரத்யேகமாக காட்சிக்காக கர்நாடகாவில், ஒரு டிக்கெட்டின் விலை 1170 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால் அதிர்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்...

திரையரங்கமே டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ள சூழலில், பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டுகளோ 2 ஆயிரத்தை கடந்து 3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த ரசிகர் காட்சியை காண, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கர்நாகாவிற்கு ரஜினி ரசிகர் படை படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் வேட்டையன் திரைப்படம் வசூல் வேட்டையில் கலக்குமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்