``வேட்டையன் படத்த போட கூடாது'' .. கொந்தளிப்பில் பெற்றோர், - கோபத்தில் கோவில்பட்டி - காரணம் என்ன..?

x

வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவமும், இயக்குநர் மீதான போலீஸ் புகாரும் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பார்க்கலாம் விரிவாக...

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் உள்ள திரையரங்கு ஒன்றை, காந்தி நகர் மக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தின் களேபரம்தான் இது...

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், பகத் பாசில் என நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்க்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது வேட்டையன் திரைப்படம்..

ரசிகர்களின் ஆராவரத்திற்கிடையே, அதிரிபுரியான கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வேட்டையன் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது..

கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள நகராட்சி பள்ளி.. வேட்டையன் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது...

இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கோவில்பட்டி லட்சுமி திரையரங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கிவிட்டு படத்தை ஒளிபரப்புமாறு பொதுமக்களும், தங்களால் ஒன்று செய்ய முடியாது காவல்நிலையம் செல்லுங்கள் என திரையரங்க உரிமையாளரும் வாக்குவாதத்தில் ஈடுபட, படம் என்ன காவல்நிலையத்திலா ஓடுகிறது.. தியேட்டரில்தானே எனக்கூறி வார்த்தை மோதல் முற்றி இருக்கிறது..

இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்படும் அரசு பள்ளி ..இரு முறை முழு தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பதாக கூறி ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார் இவர்...

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது..

முன்னதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வேட்டையன் திரைப்பட இயக்குனர் மீது சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்