ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பும் தி கோட்..படத்தின் பாதி கதையை உளறி விட்டாரா பிரேம்ஜி ?

x

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு கூறி வரும் சஸ்பென்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.. இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...

விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி அஜித் ரசிகர்களையும் தி கோட் திரைப்படத்திற்கு காத்திருக்கும் படியாக சூழலை உருவாக்கி விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு....

படத்தில் அஜித் நடித்திருக்கும் காட்சியோ அல்லது அவரின் குரலோ இடம்பெறும் என கூறி வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க, க்ளைமேக்ஸில் அஜித் வர வாய்ப்புள்ளது என பப்ளிக்காக போட்டு உடைத்து விட்டார் நடிகர் வைபவ்.

அதே போல் படம் முடிந்தவுடன் ப்ளூப்பர்ஸ்-ம் வெளியாகும் என கூறியுள்ள நிலையில், ப்ளூப்பர்ஸ்க்கு பின் ஒரு ட்விஸ்ட் உள்ளது என கூறி திகைக்க வைத்துள்ளார் வைபவ்...

படக்குழுவைச் சேர்ந்த பலரும் ஆளுக்கு ஒரு பக்கம் நேர்காணல்கள் கொடுத்து வர, வித விதமான சர்பிரைஸான விஷயங்கள் பல வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

அதிலும் படத்தின் முதல் 60 நொடிக்கு ஹைப் ஏற்றியுள்ளதோடு, ரசிகர்களை ஈர்க்க தவறிய விசில் போடு பாடல், தான் ஓபனிங் சாங் என்றும் கூறியுள்ளார் பிரேம்ஜி...

மேலும் விசில் போடு பாடலின் ரீமிக்ஸ் பாடலும் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார் பிரேம்ஜி...

அத்துடன் படத்தில், விஜய்யின் காரின் எண் சி எம் 2026 எனக் குறிப்பிட்டுள்ளதோடு, படத்தின் பாதி கதையை நேர்காணலிலேயே கொட்டியிருக்கிறார் பிரேம்ஜி..

படத்தில் நடிகை சினேகா கதாபாத்திரத்தின் தம்பியாக நடித்துள்ளதாக கூறிய பிரேம்ஜி, கோட் திரைப்படத்தில் விஜய்யிடமே அவரது டயலாக்-ஐ கூறியுள்ளதாக கலகலப்புடன் பேசியுள்ளார்..

மேலும் மட்ட பாடல், இளம் வயது விஜய்யின் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் என்பது படக்குழுவின் கருத்து...

இது மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யங்களை குறித்து பேசிய வெங்கட் பிரபு, தமிழக வெற்றி கழகம் கட்சி அறிவிப்பின் போது, நடிகர் விஜய் கோட் திரைப்படத்தின் முக்கிய சீன் ஷூட்டிங்கில் தங்களுடனே இருந்ததாக சுவாரஸ்ய சம்பவத்தை கூறியுள்ளார்..

அதுமட்டுமின்றி, சென்னை கத்திப்பாரா பகுதியில் நடிகர் விஜய்யை வைத்து ஷூட்டிங் எடுத்துள்ளதாகவும், அந்தக்காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை படக்குழு அதிகரித்து வர, செப்டம்பர் 5ம் தேதிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்