விடாது துரத்தும் கொடைக்கானல் விவகாரம்... நடிகர் பாபி சிம்ஹா மீது பாய்ந்தது வழக்கு

x

கொடைக்கானல் வில்பட்டியில், நடிகர் பாபிசிம்ஹாவுக்கு சொந்தமான நிலத்தில், தனது நண்பர் உஷேன் என்பவரின் உறவினர் ஜமீர் என்பவர் கட்டிட பணியை மேற்கொண்டு வந்தார். 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், பாபிசிம்ஹா - ஜமீர் இடையே பிரச்னை ஏற்பட்டதாக, தெரிகிறது. இதனிடையே, கடந்த மாதம் 20ஆம் தேதி பாபிசிம்ஹா, கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திரா ராஜு உள்பட நான்கு பேர், நண்பர் உஷேனுக்கு சொந்த‌மான விடுதிக்கு வந்ததாகவும், அப்போது கட்டிட பணி தொடர்பாக அறிவுரை கூற முயன்ற உஷேனுக்கு பாபிசிம்ஹா கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், பாபிசிம்ஹா, ராமச்சந்திரா ராஜு உள்பட நான்கு பேர் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்