விஜய் பேசிய அந்த வார்த்தை..!உண்மையை உடைத்த லோகேஷ்.. மிரண்டு போன திரையுலகம்

x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் 19ம் தேதி திரைக்கு வரவுள்ள லியோ திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த 5ம் தேதி வெளியானது... ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற போதும், முடிவில் விஜய் பேசிய ஒரு ஆபாச வார்த்தை பூதாகரமானது... பொறுப்பான நடிகர்... அதிலும் குழந்தைகள் மத்தியில் மிகப்பிரபலமான நடிகர் இவ்வாறு பேசலாமா என பல தரப்பினரும் கொந்தளித்த நிலையில், இந்தக் காட்சிக்கு தான் பொறுப்பு என லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். படம் முழுமையாக தணிக்கை குழு சான்றிதழ் பெற்ற நிலையில் படத்தின் பல்வேறு இடங்களில் இருந்த ஆபாச வார்த்தைகளும் சில காட்சிகளும் நீக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், யூ டியூபில் ட்ரைலரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்