பட வசூலை குறைத்து காட்ட... Theater செய்த செயல்? கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

x

பட வசூலை குறைத்து காட்ட... Theater செய்த செயல்? கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள திரையரங்கில் ராயன் படத்திற்கு துண்டு சீட்டில் டிக்கெட் எழுதி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் அண்மையில் வெளியான நிலையில், பட்டாளம் பகுதியில் உள்ள தியேட்டரில் தனுஷின் படத்தின் வசூலை குறைத்து காண்பிக்க துண்டு சீட்டில் டிக்கெட்டை எழுதி தருவதாக தனுஷ் ரசிகர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மதுபோதையில் வருவோரை தியேட்டரில் அனுமதிப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்