ஒரே மேடையில் இளையராஜா, A R ரகுமான் ?சென்னை மக்களுக்கு காத்திருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

x

சென்னையில் வரும் 13-ம் தேதி நடைபெறும் ட்ரம்ஸ் திருவிழாவில் பங்கேற்க இளையராஜா, ஏர்.ஆர். ரஹ்மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இசைக்கலைஞர் லிடியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை காமராஜர் அரங்கத்தில் ட்ரம்ஸ் திருவிழா நடைபெற உள்ளதாகவும், இதில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற அமெரிக்க ட்ரம்ஸ் கலைஞர் டேவ் வேக்ல் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நேரம் இருந்தால் வருவதாக அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் லிடியன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்