இன்று இரவு 9 மணிக்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி... `தந்தி 1’ டி.வி.யில் மிஸ் பண்ணிடாதீங்க

x

தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றிரவு 9 மணிக்கு சஸ்பன்ஸ் திரில்லர் திரைப்படம், சக்கர வியூகம், ஒளிபரப்பாகிறது.

விவேக் திரிவேதியின் மனைவி ஊர்வசி கொலையில் துவங்கும் கதையில், கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் அஜய். விசாரனையில் ஊர்வசியின் கணவர் விவேக் மீதும், பின்னர் விவேக்கின் நெருங்கிய நண்பர் ஷரத் மீதும் சந்தேகம் விழுகிறது. அதே சமயம், கொலை நடந்த வீட்டில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகள் திருடு போனதால், அந்த வீட்டின் பணிப்பெண் மீதும் அஜய்யின் சந்தேக பார்வை விழுகிறது. இப்படி, ஒவ்வொருவராக அஜய் சந்தேகப்பட்டு நெருங்கும் போது, எதிர்பாராத திடீர் திருப்பங்கள் வழக்கை திசை திருப்புகிறது. இப்படி பல திருப்பங்கள் உள்ள கதையில், உண்மையான குற்றவாளி யார் என்பதை அஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே 'சக்ரவியூகம்' படத்தின் கதை. இந்த திரைப்படம், உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. புது அனுபவத்துக்கு நீங்களும் தயாராகுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்