மலையாள திரைப்படங்களில் முக்கிய அம்சமாக மாறிய தமிழ் பாடல்கள்
பழைய தமிழ் பாடல்கள் மீண்டும் புதிய திரைப்படங்களில் பயன்படுத்தும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது... லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதில் முக்கிய பங்குண்டு...
பழைய தமிழ் பாடல்களை புதிய தமிழ் படங்களில் கேட்கும்போது ஒரு நாஸ்டால்ஜிக் உணர்வு வருகிறதே... அதையே மொழி கடந்து மலையாள படங்களில் கேட்கையில் இன்னும் சுகமாகத்தான் இருக்கிறது...
மஞ்சும்மல் பாய்ஸ், குருவாயூர் அம்பலநடையில் போன்ற மலையாள படங்களில் தமிழ் பாடல்கள் வரும் போது க்ளாப்ஸ் அள்ளுகிறது..
இதற்கு முன்பும் பல தமிழ் பாடல்கள் மலையாள படங்களில் இடம்பெற்றுள்ளன...
சந்திரமுகியில் வரும் ராரா பாடலைப் போல, சந்திரமுகியின் அசல் வெர்ஷனான "மணிச்சித்திரதாழில்" இடம்பெற்ற "ஒருமுறை வந்து பார்த்தாயா" என்ற தமிழ் பாடல் மிகப்பிரபலம்...
Next Story