"நான் பிறக்கும் போது நடிக்க தொடங்கியவர் ரஜினி" - அரங்கத்தை அதிர விட்ட நடிகர் சூர்யா
கோவையில் நடைபெற்ற மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது, கங்குவா படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய சூர்யா, தான் பிறக்கும் போதே ரஜினி நடிக்க வந்து விட்டதாகவும், சுமார் 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக அவர் திகழ்வதாகவும் கூறினார். இதனால், அக்டோபர் 10-ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியாவது சரியாக இருக்குமென தான் கருதுவதாக சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், கங்குவா திரைப்படம் ஒரு குழந்தை எனவும், அக்குழந்தை பிறக்கும் நாளை ரசிகர்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் எனத் தான் நம்புவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
Next Story