கண்டபடி பேசிய சுசித்ராவுக்கு முக்கிய இடத்தில் இருந்து வந்த வார்னிங்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளதாக சாடப்பட்டுள்ளது.
திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் போற்றக் கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாடகி சுசித்ரா அவதூறாகவும், பேட்டியளித்திருப்பது கண்டிக்கத்தக்க செயல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயல் என்றும், இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story