"0.001% சிவாஜியை போல் நடிக்க வேண்டும்" - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான பேச்சு | Sivaji Ganesan
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், அன்னை இல்லத்தில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள அன்னை இல்லத்திற்கு சென்ற எம்.எஸ்.பாஸ்கர், உருவப்படத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றார். பின்னர் சிவாஜி குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், சிவாஜி மாதிரியான நடிகனோடு பேசி, பழகுவதற்கான எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது நான் செய்த புண்ணியம் என்றார்.
Next Story