அரண்டுபோன நடிகர் சிங்கம்புலி.. திடீர்னு என்னாச்சு? தீயாய் பரவும் வீடியோ | Thanthitv

x

தன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியிருக்கும் மர்ம கும்பல், தான் உடல் நலம் குன்றி அவதிப்படுவதாக சொல்லி பண மோசடியில் ஈடுபடுவதாக நடிகர் சிங்கம்புலி வீடியோ வெளியிட்டு குற்றம்சுமத்தியுள்ளார். வீடியோவில் மேலும் பேசிய அவர், தான் உடல்நிலை சரியில்லாமலும், சிகிச்சைக்கு வழியில்லாமல் தவிப்பதாகவும் இணையத்தில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானவை எனக் கூறி விளக்கமளித்துள்ளார். மேலும், இதுபோன்று தகவல் பரப்பி மோசடி செய்ய முயற்சிக்கும் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்