விஜய்யே எதிர்பாரா இடத்தில் இருந்து ஆதரவு - சிவராஜ்குமார் அதிரடி
கன்னட நடிகரான சிவ ராஜ்குமார் தனது குடும்பத்தாருடன் திருநள்ளாரில் சாமி தரிசனம் செய்தார்... சிவ ராஜ்குமார் இன்று அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தார், நண்பர்களுடன் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். சிவராஜ்குமாரைக் கண்ட பக்தர்கள் போட்டி போட்டு அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்... கூட்டத்தில் சிக்கிய சிவராஜ்குமாரை போலீசார் பத்திரமாக மீட்டு அலுவலகம் அழைத்து வந்தனர். அங்கு அவர் கோவிலுக்கு ஏற்கனவே வழங்கிய வெள்ளி கிரீடத்தை கோவில் நிர்வாகத்தினர் அவரிடம் காண்பித்தனர். தொடர்ந்து தந்தி டிவிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த சிவராஜ்குமார், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றார்...
Next Story