`ஜெயிலர்' படம் மீது பரபரப்பு வழக்கு.. நீதிபதி கேட்ட ஒரே கேள்வி..? - ஆடிப்போன மனுதாரர் அடுத்த நொடியில் டுவிஸ்ட்

x

ஜெயிலர் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள 'யு ஏ' சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெயிலர் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளது என்றும், இதற்கு யூஏ சான்றிதல் வழங்கியது தவறு என்றும், வழக்கறிஞரான எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி, "திரைப்படத்தில் வன்முறை அதிகம், குறைவு என்று எப்படி வகைப்படுத்துவது? என கேள்வி எழுப்பினார். பின்னர், இது பொதுநல வழக்கு அல்ல, விளம்பர நல வழக்கு என்றும் கூறி, மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்தது. இந்நிலையில், மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடியும் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்