விவாகரத்து ஆனாலும் அதை மறக்காத சமந்தா... இணையத்தில் வைரலாகும் போஸ்ட்

x

தனது வெள்ளை நிற திருமண ஆடையை கருப்பு நிறத்தில் மாற்றி, ரசிகர்களை திகைக்க செய்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவுக்கு சமந்தாவிற்கும் இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் திருமணமானது. பின்னர், 2021ம் ஆண்டு அவர்களது விவகாரத்து குறித்து இருவரும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணத்தின் போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிற கவுனை, ஃபேஷன் டிசைனர்களின் உதவியுடன் கருப்பு நிறத்தில் மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு, டிரெண்ட் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்