சமந்தா பற்ற வைத்த நெருப்பால்.. ஆடிப்போன தெலுங்கு திரையுலகம் | Samantha

x

மலையாள சினிமாவில் நடிகைகளிடம் நடந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஹேமா கமிட்டி தயாரித்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பெண்கள் சார்பில் ஆதரவும், வரவேற்பு தெரிவிப்பதாக WCC அமைப்பின் அறிக்கையை சமந்தா பகிர்ந்துள்ளார். இதில், பெண்கள் பாதுகாப்புக்காக தெலுங்கு திரையுலகில் 2019ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டதை பதிவில் சுட்டிக்காட்டியுள்ள சமந்தா, பாலியல் கொடுமைகள் குறித்து அந்த குழு தயாரித்த அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக உரிய திட்டம் வகுக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்