சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு.. அடுத்தடுத்து வெளியாகும் புதிய அதிர்ச்சி தகவல்
பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு வழக்கில் ஆறாவது குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 14 -ந்தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 5 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஆறாவது குற்றவாளியான ஹர்பால் சிங் என்பவரை ஹரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூடு நடத்திய இருவருக்கும் மூன்று லட்சம் வரை ஹர்பால் சிங் பணம் கொடுத்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Next Story