ரெக்கார்ட் பிரேக் செய்த சலார் திரைப்படம்
முதல் நாள் வசூல் ராஜா பட்டம் பெற்ற ஜவான் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது பிராசாந்த் நீல் இன் சலார் திரைப்படம்....
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த படம்தான் சலார். கேஜிஎப் படத்தின் இயக்கநர் என்பதால் இந்தப்படம் மீதான எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருந்தது.
பாகுபலி படத்திற்கு பின் வெளியான 3 படங்களுக்குமே பிரபாஸிற்கு எதிர்பார்த்த ஹிட்டை தரவில்லை. ஆனால், சலார் படம் அமைத்திருந்த கூட்டணியால் நம்பிக்கையம் எதிர்பார்ப்பும் பற்றிக் கொண்டது.
கேஜிஎப் படத்தில் வரும் அதே அடி தடி காட்சிகள், புழுதி படலங்களை தியேட்டரில் பார்த்த ரசிகர்களுக்கு சிலிர்த்துக் கொண்டது.
ரசிர்களின் அந்த வரவேற்பே இந்த மாபெரும் வசூல். நாடு முழுவதும் 'சலார்' படம் முதல் நாளில் 95 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தெலங்கானா, ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
க உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியான மொத்த கலக்செனையும் சேர்த்து பார்த்தால் 178.7 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக நடிகர் பிரித்திவிராஜ் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் முதல் நாள் வசூல் வேட்டையில் முதலிடத்தை பிடித்திருந்த ஜவானை பின்னுக்கு தள்ளியிருக்கிறது சலார் திரைப்படம். மிச்சமுள்ள 500 கோடி க்ளப், 1000 கோடி க்ளப் படங்களில் சலார் திரைப்படம் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.