"2வது முறை படத்தை பார்த்தேன், ரூ.1.5 கோடி கடனடைத்தேன்" - கண் கலங்கிய ரசிகர்

x

தனது சாமானியன் படத்தை பார்த்த பின்னர், ஒன்றரை கோடி கடனுடன் இருந்த நபர் கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழ்வதாக நடிகர் ராமராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற சாமானியன் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், தகுதிக்கு மீறி கடன் வாங்கி கஷ்டப்படாதீர்கள் என வேண்டுகோள் விடுத்த அவர், இந்த படத்தை பார்த்த பின்னர் ஒருவர் ஒன்றரை கோடி கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழ்வதாக தெரிவித்தது பெருமையாக உள்ள என கூறினார். முன்னதாக அவருக்கு ரசிகர்கள் மேளதாளங்களுடன் வரவேற்பு அளித்தநிலையில், அங்குள்ள காமராஜர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்