பைனல் ஸ்டேஜில் 'வேட்டையன்' ஷூட்டிங்.. விறுவிறுவென கிளம்பிய ரஜினிகாந்த்

x

வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டுச் சென்றார். ரஜினியின் 170வது திரைப்படமான வேட்டையன் படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்..


Next Story

மேலும் செய்திகள்