"சூப்பர் ஹீரோ தாத்தா பேச்சை கேட்கும் மகன்..." இன்ஸ்டாவில் ரஜினி மகள் நெகிழ்ச்சி | Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த், கூலி, வேட்டையன் என இரண்டு திரைப்படங்களில் பிசியாக உள்ள நிலையில், தனது பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்பறையில் விட்டு வரும் புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "என் மகன் பள்ளிக்கு செல்லமாட்டேன் என பிடிவாதம் பிடித்தான். சூப்பர் ஹீரோ தாத்தாவிடம் இதை சொன்னவுடன், அவர் அன்பாக பேசி, புறப்பட வைத்து, பள்ளி வகுப்பறையிலேயே அவனை விட்டு வந்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார் சௌந்தர்யா ரஜனிகாந்த். மேலும், திரையிலும், நிஜத்திலும் எந்த கதாப்பாத்திரத்தை தந்தாலும், தன் அப்பா சிறப்பாக செய்துவிடுவதாக அதில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Next Story