செம மாஸ் டைட்டிலுடன் களம் இறங்கும் ரஜினி - சும்மா தெறிக்கும் ‘தலைவர் 170’ அப்டேட்..

x

நடிகர் ரஜினி மீண்டும் வேட்டையனாக களம் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, 'ஜெய்பீம்' பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தயாராகும் 'தலைவர் 170' படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு 'வேட்டையன்' என பெயரிட படக்குழு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த டைட்டில் தற்போது இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடம் இருப்பதால், அதை வாங்கும் முயற்சியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 'சந்திரமுகி' படத்தில் 'வேட்டையன்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்