'லால் சலாம்' டப்பிங்கை நிறைவு செய்த ரஜினி..கவனம் ஈர்க்கும் ரஜினியின் வசனம்..
லால் சலாம் படத்திற்கு ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்து முடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி வரும் லால் சலாம் படத்தில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் டப்பிங்கை நிறைவு செய்தார். அவர் பேசிய வசனத்துடன் படக்குழு பகிர்ந்த வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.
Next Story