'பேட்ட' படத்துடன் இணைந்த 'தங்கமகன்' பாடல்...'பேட்ட' காட்சிகளுடன் 'தங்கமகன்' டிஸ்கோ பாடலை இணைத்து ரீமிக்ஸ்
ரஜினி நடித்த பேட்ட படத்தின் பாடல் காட்சிகளுடன், தங்கமகன் படத்தின் டிஸ்கோ பாடலை இணைத்து சோனி நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது. கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான தங்கமகன் படத்தில், இளையராஜா இசையில் உருவான "வா வா பக்கம் வா" என்ற பாடலை, பேட்ட படத்தின் காட்சிகளுடன் இணைத்து ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், ரஜினியின் இந்த ரீமிக்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Next Story