பாலியல் புகார் - நடிகர் நிவின்பாலி மீது வழக்குபதிவு

x

இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல நடிகர் நிவின் பாலி மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. மலையாள திரையுலகை மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகையும் பரபரப்புக்குள்ளாக்கிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....ஹேமா அறிக்கையால் ஆட்டம் கண்டிருக்கும் மல்லுவுட்டை, அம்மாநிலத்தின் முன்னணி நடிகர்கள் பலர் அடுத்தடுத்து சிக்கி அதிர வைத்து கொண்டிருக்கின்றனர்சினிமா வாய்ப்பு - இளம் பெண்ணை துபாய் அழைத்துச் சென்ற படக்குழு

இந்த வரிசையில் நடிகர் நிவின் பாலியும் சேர்ந்திருக்கிறார்...

"நேரம்" திரைப்படம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமான நிவின் பாலி, பிரேமம் திரைப்படம் வாயிலாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்...

தற்போது, தமிழில்... இயக்குநர் ராமின் "ஏழு கடல் ஏழு மலை" படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான், இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில் நிவின் பாலி மீது கேரள எர்ணாகுளம் போலீசார் பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குபதிவு செய்துள்ளனர்...

பெண்ணை, நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாக

புகார்

குற்றச்சாட்டு ஆதாரமற்றது - மறுக்கும் நிவின் பாலி

இந்நிலையில், திருச்சூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சுனில், பஷீர், குட்டன், பினு, ஷிரேயா என ஐவருடன் சேர்ந்து, ஆறாவதாக நிவின் பாலி மீதும் போலீசார் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்...

இவர்களிடம் கேரள அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது...

இதனிடையே, பெண்ணின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, தனது எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்ட நிவின்பாலி, வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக குறிப்பிட்டிருக்கும் நிலையில், பரபரப்பின் உச்சகட்டத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது கேரள திரையுலகம்..

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, துபாய் அழைத்து செல்லப்பட்ட தன்னை , நடிகர் நிவின் பாலி துபாயில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருக்கிறார்...

தொடர்ந்து அப்படக்குழுவை சேர்ந்த நால்வரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்து மலையாள திரையுலகை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறார்...

இதற்கு, அப்படக்குழுவில் பணியாற்றிய ஷிரேயா என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறி கேரளாவை அதிரச் செய்திருக்கிறார்...குற்றச்சாட்டு ஆதாரமற்றது - மறுக்கும் நிவின் பாலி

இந்நிலையில், திருச்சூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சுனில், பஷீர், குட்டன், பினு, ஷிரேயா என ஐவருடன் சேர்ந்து, ஆறாவதாக நிவின் பாலி மீதும் போலீசார் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்...

இவர்களிடம் கேரள அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது...

இதனிடையே, பெண்ணின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, தனது எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்ட நிவின்பாலி, வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக குறிப்பிட்டிருக்கும் நிலையில், பரபரப்பின் உச்சகட்டத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது கேரள திரையுலகம்..

Next Story

மேலும் செய்திகள்